Sunday, September 26, 2010

தகவலின் சிறப்பியல்புகளும் அதன் கூறுகளும்

தரவுகள் (Data)
உண்மை உலகில் ஏதாவதொன்றைக் குறிப்பிடுகின்ற அடிப்படை உண்மை தரவு எனப்படும். இவ்வுண்மைகள் மக்கள், இடம், எண்ணக்கரு (Concept), நிகழ்ச்சி, மற்றும் பொருள் சார்ந்ததாக இருக்கும்.
தரவுகளின் வகைகள்;
  • Alpha Numeric Data........ எழுத்து, இலக்கம், குறியீடுகள் (Punctuation marks),விஷேட குறியீடுகள்.
  • Image.............................. படம்> உருக்கள்
  • Audio Data....................... செவிப்புலத் தரவுகள்Sound, Noise
  • Video Data....................... சலனப்படங்கள்.
  • Animation
தரவுகளின் சிறப்பியல்புகள் - Characteristics of Data
  • செயல்முறை ஒன்றினூடாகக் கொண்டு செல்லப்படாதது - Unprocessed 
  • ஒழுங்கு படுத்தப்படாதது - Unorganized
  • தனியானது -  Discrete
  • தகவலுக்கான அடிப்படை
தரவுக்கான உதாரணங்கள் Examples of data

  • ஒரு மனிதனின் உயரம் 65'
  • ஒருவரின் பெயர் Roosnam
  • அவரின் நிறை 150Kg
  • அவரின் நிறம் மண்ணிறம்

தரவுகளைக் கையாள்தல் - Manipulating data

  • தரவுகளை வகைப்படுத்தல்.

தரவுகளை பொதுவாக இரண்டு வகையாக வகைப்படுத்தலாம்.
  1. அளவறித் தரவுகள் -Quantitative Data
அளவிற்கேற்ப மதிப்பிடக் கூடிய தரவுகள். இது எண்ணிக்கை அல்லது இலக்க அடிப்படையில் காட்டப்படும். இதனை எண்கணித செயற்பாடுகளுக்குப் பாவிக்கலாம். இது மேலும் இரண்டு வகைப்படும்.

  • தொடரான தரவு - Quantitative Data
      பின்னம், தசம எண்களினால் குறித்துக் காட்டக்கூடிய தரவுகள்.
             Eg:
        மின்னழுத்தம் - Voltage è 34.5V
        உயரம் - Height è 12.4cm
        நிறை - Weight è 12.5kg
        நேரம் - Time è 12.52 செக்கன்கள்
  •  தொடர்ச்சியற்ற தரவு - Continuous Data

    முழு எண்களாக மாத்திரமே குறித்துக் காட்டப்படக்கூடிய தரவுகள்.
    எண்ணிக் கணக்கிடக் கூடியது.
       Eg:-
        2010 இல் உற்பத்தி செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை 100,000  1000.52.
    இன்று பாடசாலைக்குப் பிந்தி வந்த மாணவர்கள். 123    123.742
    இன்று பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட
    குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை 342        312.25
 2 .பண்பறித்தரவுகள் - Qualitative Data
    இது குணம், இயல்பு, பண்பு சார்ந்த தரவுகள், இதனை எண்களால்
    குறித்துக் காட்ட முடியாது

Entity & Attribute
Entity என்பது பொதுப்பெயரிடப்பட்டு அழைக்கப்படுகிற மக்கள் தொகுதியொன்றின் வகுப்பு (Employee, Student, Customer), இடம் (City, Warehouse), பொருள் (Inventory, Item), மற்றும் எண்ணக்கரு (Bank Account) என்பவற்றைக் குறிக்கும். இதற்கான தரவுகள் சேமிக்கப்பட்டு முகாமைத்துவம் செய்யப்படும்.
Eg:- Item, è Expire date = 12.06.2010

Attribute:- Entity ஒன்றின் பண்புகள்
Entity
Attribute
Student
Name, Age, Index number
Bank Account
Account number, Name, Date, Balance
Pottuvil
Area, Population,
Car
Engine Number, Mileage, Colour,